சினிமா

வெற்றிகளைக் குவிக்கும் நிவேதா பெத்துராஜ்.. ‘ஆஹா’ OTT யில் வெளியாகும் ‘பிளடி மேரி’ திரைப்படம்!

நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளடி மேரி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி ஆஹா OTT தளத்தில் படம் வெளியாகிறது.

நிவேதா பெத்துராஜ்  ஒரு நாள் கூத்து (2016) படத்தில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு, மெண்டல் மதிலோ என்ற படத்தின் மூலம் டோலிவுட்டில் களமிறங்கினார். அடுத்தடுத்த படங்களான எம்மனசு தங்கம் (2017) மற்றும் விண்வெளி த்ரில்லரான டிக் டிக் டிக் அவருக்கு வெற்றிகளை தேடித்தந்தது.

2019 ஆம் ஆண்டில் விஜய் சுந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து கலவையான விமர்சனங்களைப் பெற்றார். 2021 ஆம் ஆண்டில், கிஷோர் திருமலை இயக்கிய ரெட் படத்தில் ராம் போத்தினேனி, மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர் ஆகியோருடன் இணைந்து நடித்தார். மேலும், 2015 ஆம் ஆண்டில், நிவேதா பெத்துராஜ் மிஸ் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ப்ளடி மேரி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட க்ரைம் தில்லார் ஆகும். இதில் நிவேதா பெத்துராஜ் கதையின் நாயகியாகவும், அஜய், ப்ரம்மாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளடி மேரி படத்தை சண்டூ மொண்டேடி என்பவர் இயக்கி நடித்துள்ளார். இக்கதையை பிரஷாந்த் குமார் டிம்மல எழுதியுள்ளார். T.G.விஷ்வ பிரசாத் தயாரிப்பில் ஏப்ரல் 15-ம் தேதி ஆஹா OTT தளத்தில் நேரடியாக படம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

நிவேதா பெத்துராஜ், ப்ளடி மேரி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் பற்றி உங்களுடைய கருத்து என்ன? 

Related posts