பற்றி எரிந்த திரையரங்கு – பீஸ்ட் FDFSசால் நடந்த சோகம்!
மதுரை திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படம் ஓடிக்கொண்டிருந்தபோது திரை தீ பற்றி எரிந்தது.
பீஸ்ட் படம்
இந்த வருடத்தில் மிகப்பெரிய வசூல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்போடு இருந்துவந்த படம்தான் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் இன்று திரையரங்குகளில் வெளிவந்து அவரின் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டெ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திருப்பது இயக்குனர் நெல்சன். நெல்சனின் டாக்டர் படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றுது.
பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ‘அரபிக் குத்து’ யூடியூபில் 296 மில்லியன் பார்வையாளர்களை பதிவு செய்தது.மேலும் சமூக வலைத்தளத்திலும் ட்ரெண்டிங்கில் இருந்தது.
இதை தொடர்ந்து பீஸ்ட் பட குழுவினர் வெளியிட்ட படத்தின் ட்ரைலர், ப்ரோமோ, பாடல்கள் என எல்லாமே மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றது.
விஜய் பேட்டி
பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளிட்டு விழா இல்லாததால் சன் பிக்ச்சர்ஸ் விஜயுடன் நேரடி நேர்காணல் ஒன்றை ஏற்பட்டு செய்தது. 10 வருடத்திற்கு பிறகு, தொலைக்காட்சி நேர்காணலில் விஜய் கலந்துகொள்கிறார் என்ற செய்தி அவரின் ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. அதைபோல், அந்த நேர்காணலில் இயக்குனர் நெல்சனின் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்கள் சமூக வலைத்தளத்தில் விவாதப்பொருளாகவும் மாறியது.
பீஸ்ட்க்கு தடை
பல எதிர்பார்ப்புகள் பீஸ்ட் படத்திற்கு இருந்தாலும் அதேசமயத்தில் எதிர்ப்புகளும் கிளம்பின. பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் சில காட்சிகள் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் வருத்தம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சில அரபு நாடுகளில் பீஸ்ட் படம் வெளியிட தடை விதித்தனர்.
திரையரங்கில் தீ
பல எதிர்பார்ப்புகளுடன் இன்று பீஸ்ட் படம் 800க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதில் மதுரை மேலூர் கணேஷ் திரையரங்கில் அதிகாலை காட்சியை ரசிகர்கள் ஆரவாரமாக பார்த்து கொண்டு இருந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென திரை தீ பற்றி எரிய தொடங்கியது. உடனே திரையரங்கு வேலையாட்கள் தீயணைப்பு கருவிகள் மூலம் தீ யை அணைத்தனர். இதைதொடர்ந்து திரையரங்கில் சில மணி நேரம் காட்சிகள் நிறுத்திவைக்கப்பட்டது.