படப்பிடிப்பு
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். அதனைத்தொடர்ந்து ‘நட்புனா என்னானு தெரியுமா’ ‘லிப்ட்’ ஆகிய படங்களில் கதாநாயனாக நடித்தார். இவர் தற்போது ‘டாடா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை கணேஷ் பாபு இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் மகனே என் கண்மணி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘டாடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
And its a wrap ✨#DADA
See you all in theatrs soon 😊🤞 pic.twitter.com/OD2z8XOekX— Aparna Das (@aparnaDasss) September 18, 2022

