விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய்யின் வாரிசு
பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வாரிசு படத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த நண்பன் மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

