சினிமாவெள்ளித்திரை

தமிழில் ட்விட் செய்த பிரபல ஹிந்தி நடிகர்!

டவிட்டர் பதிவு 

அக்‌ஷய் குமார் நடிப்பில், அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராம் சேது. இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ ஆகியோர் நடித்துள்ளனர். ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் , லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ராம் சேது படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு ராம் சேது ஓட முதல் கிளிம்ப்ஸ் பிடிச்சுருக்கா.? அப்போ கண்டிப்பா ட்ரைலர் இன்னும் பிடிக்கும்’ என தமிழில் பதிவிட்டுள்ளார்.

Related posts