தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் பேசிக் கொண்டிருக்கும்போதே பெண் ஒருவர் மைக்கை பிடுங்கி தனக்கு நீதி வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆவடி அருகே திருநின்றவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் நுழைந்த பெண், தன்னை தாக்கி விட்டதாக கண்ணீருடன் நின்றார். இதனை பார்த்த தவெக நிர்வாகி ராஜமோகன் அவர் வேறு யாருமில்லை, தவெக பெண் நிர்வாகி, அவரை திமுகவினர் தாக்கி விட்டதாக கூறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மருத்துவமனை அழைத்து செல்ல முற்பட்டனர். அதற்குள் பெண்ணின் உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால், அந்த பெண் திடீரென மேடையில் ஏறி தனக்கு நீதி வேண்டும் என்று கையில் தாலியை ஏந்தியவாறு தெரிவித்தார்.
இதனால் குழப்பமடைந்த தவெகவினர் மைக் கனக்ஷனை ஆப் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏற்றினர். அப்போது அவரது உறவினர்கள் பெண்ணுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அழைத்து சென்றனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தவெகவினர் அவசர அவசரமாக நல திட்ட உதவிகளை கொடுத்து கூட்டத்தை முடித்தனர்.
இதையும் படிங்க: உதகையில் பயன்பாட்டிற்கு வந்த 16 புதிய புகையில்லா பேருந்துகள்
விஜய் குறித்து நயினார் நகேந்திரன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தவெக தலைவர் விஜய் குறித்து நயினார் நகேந்திரன் பேசியிருப்பது அரசியலில் மோசமான உதாரணமாகிவிடும். சமநிலை மறந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் வளர்ச்சியை பார்த்து நிலை தடுமாறி இப்படி உளறி இருக்கிறார்.
தவெக பொதுக்கூட்டத்தில் நுழைந்து மேடையில் பேசிய பெண்ணால் பரபரப்பு (ETV Bharat Tamil Nadu)
தவெக கொள்கை இல்லாத கூட்டம் என உதயநிதி கூறி இருப்பது நகைச்சுவையாக உள்ளது. அதிகார பகிர்வு என்பது தவெக துவக்கத்தில் இருந்து கூறி வருகிறோம். அதிகாரம் உள்ள கட்சிகளிடம் நாம் கேட்க வேண்டியது அதிகாரம் மட்டுமே. திரும்பத் திரும்ப ஐந்து சீட், 10 சீட்டு என கேட்கக் கூடாது. தேமுதிக, தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். எங்களது கட்சியில் பொதுக்குழு, கூட்டணி குறித்து முடிவுகளை தலைவர் தான் எடுப்பார் என்றார்.

