Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»மொத்த சொத்து மதிப்பு ரூ.603.20 கோடி – மிரட்டும் விஜய்யின் பிரமாணப் பத்திரம்

மொத்த சொத்து மதிப்பு ரூ.603.20 கோடி – மிரட்டும் விஜய்யின் பிரமாணப் பத்திரம்

March 31, 20262 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தவெக தலைவர் விஜய் தன்னிடம் மொத்தமாக ரூ. 603.20 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், முதன்முறையாக தேர்தலில் களம் காணும் தவெக கட்சியின் தலைவர் விஜய், அவருடைய வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தாக்கல் செய்தார்.

அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வியாசர்பாடி அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது அவர், சொத்துகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

அதில், தவெக தலைவர் விஜய்-க்கு ரூ. 404.58 கோடி அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020-21 நிதியாண்டில் ரூ. 8.4 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 237.46 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ. 198.71 கோடியும், 2023-24 நிதியாண்டில் ரூ. 105.69 கோடியும், 2024-25 நிதியாண்டில் ரூ. 184.53 கோடியும் வருமானம் ஈட்டியிருப்பதாக வருமான வரிக்கணக்கில் கணக்கு காட்டியிருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  தி.மு.க. கூத்து பட்டறையாக மாறிவிட்டது - அண்ணாமலை குற்றச்சாட்டு !

அதே போல் மனைவி சங்கீதா பெயரில் சுமார் 15.51 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன. அவருக்கு 2020-21 நிதியாண்டில் 6.13 லட்ச ரூபாய் வருமானம் காட்டப்பட்டுள்ளது. மற்ற நிதியாண்டுகளில் வருமானம் எதுவும் காட்டப்படவில்லை.

மேலும், கையில் ரொக்கமாக ரூ. 2 லட்சமும், மனைவி கையில் ரொக்கமாக ரூ. 1 லட்சம் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, 4 விலை உயர்ந்த சொகுசு கார்களும், ஒரு விலை குறைந்த காரும் தன்னிடத்தில் இருப்பதாக விஜய் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

அது தவிர, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் டூ-வீலர் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ரூ. 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும், ரூ. 1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்க நகைகளும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதே போல், விஜய் மனைவியிடம் 4.7 கோடி ரூபாய் மதிப்பிலான 3,132 கிராம் தங்க நகைகளும், 1 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்யிடம் 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதும் தற்போது வெளியாகியிருக்கும் பிரமாணப் பத்திரம் வாயிலாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க :  தே.ஜ. கூட்டணிக்கு வரலாம்! விஜய்க்கு நயினார் மீண்டும் அழைப்பு

இத்துடன், தன் மீது எந்தவிதமான குற்றவியில் வழக்குகளும் இல்லை என்றும், அரசுக்கோ, வங்கி – நிதி நிறுவனங்களுக்கோ தான் எந்தவிதமான கடனும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் தவெக தலைவர் விஜய் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய்யிடம் கடன் வாங்கியவர்கள்

எனினும், விஜய் பல்வேறு தனிநபர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கணிசமான தொகையை கடனாக வழங்கியிருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு 3 கோடி ரூபாயும், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 3.02 கோடி ரூபாயும், தாயார் ஷோபா சந்திரசேகருக்கு 8.71 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ.எல்.பி. அந்தோணியஸ் பிரிட்டோ மற்றும் கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தலா 20 கோடி ரூபாயும், வித்யா கல்வி அறக்கட்டளைக்கு 5.84 கோடி ரூபாயும் விஜய் கடனாக வழங்கியுள்ளார்.

இது தவிர, மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி ரூபாயும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8.78 லட்சம் ரூபாயும், மகள் திவ்யா சாஷாவுக்கு 4.60 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கியுள்ளதாக, வேட்புமனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் பாடல்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை கோரி டி.ராஜேந்தர் மனு
Next Article பாடையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்… கெட்அவுட் சொன்ன போலீஸ்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,492 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,492 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.