Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நில மோசடி வழக்கு – அமைச்சர் பி.டி.ஆர். முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கு – அமைச்சர் பி.டி.ஆர். முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

March 25, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நில மோசடி புகாரில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மற்றும் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக இருந்த ஜெய்பாலாஜி என்பவர், மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் 2 வீட்டு மனைகளை தனது மனைவியின் பெயரில் பத்திரப்பதிவு செய்தார்.

ஆனால், அதற்கான தொகையை வழங்காமல் அலைக்கழித்ததாக ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் மீது நிலத்தின் உரிமையாளர் சீதாராமன் காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், கலாவதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 3-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, ஜெய்பாலாஜி மீது வேலூரில் மற்றொரு நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும் வாதிடுகையில், “ஜெய்பாலாஜியின் மனைவி கலாவதிக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர், காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் விசாரணை பாதிக்கப்படுகிறது.

இதையும் படிக்க :  போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை அடித்து துன்புறுத்திய - சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட் !

மேலும், ஜெய்பாலாஜியின் சகோதரர் சரவணசுந்தர் மற்றும் ராமகிருஷ்ணன், பாக்கியலட்சுமி, நாகலிங்கம் ஆகியோர் நில உரிமையாளர் சீதாராமனை வீடு புகுந்து, ஜெய்பாலாஜி மீதான புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர்.

அவர்கள் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே ஜெய்பாலாஜி தரப்பினரின் ஜாமீன் மனுக்கள் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி 2 வழக்குகளின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.

இதையும் படிக்க :  மதுரவாயல் - துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலம் - மத்திய அமைச்சர் தகவல்!

அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர்-நீதிபதி

இந்த மனுக்களின் மீது நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்திருந்தார். அதில், “சமீப காலமாக சில அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறைந்த விலையில் சொத்துகளை தருமாறு மிரட்டுகின்றனர். இந்த வழக்கும் அதுபோன்ற சம்பவத்தை வெளிப்படுத்துகிறது.

மனுதாரர்கள் தங்களை மதுரை மாநகராட்சி மேயருக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறி நிலத்தை பெற்றுள்ளனர். இது சம்பந்தமான புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தவுடன், புகார் அளித்தவரை மனுதாரர்களின் கூட்டாளிகள் மிரட்டியுள்ளனர். இது போன்ற வழக்குகளில் ஆவணங்களை முறையாக பரிசீலித்து ஜாமீன் வழங்குவது அவசியமாகிறது. இந்த வழக்கில் சிக்கிய கணவன், மனைவி மீதான குற்றச்சாட்டுகளும் தீவிரமானவை. இதனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அதேபோல கணவன், மனைவிக்கு ஆதரவாக புகார்தாரரை மிரட்டியதாக பதிவான வழக்கில் சிக்கிய 4 பேரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசங்கரன்கோவில் அருகே கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு; ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
Next Article தனியார் பள்ளி முதல்வரை பாலியல்ரீதியாக துன்புறுத்தி தாக்கிய தொழிலதிபர்… தாம்பரம் அருகே கொடூரம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.