Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது: பியூஸ் கோயல் ஆவேசம்

திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது: பியூஸ் கோயல் ஆவேசம்

March 23, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு தொடங்கிவிட்டது என தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் பேசியுள்ளார்.

அதிமுக – பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று (மார்ச் 23) சென்னை வந்தடைந்தார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை பியூஸ் கோயல் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”தமிழ்நாட்டில் இன்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அரசு ஊழல் நிறைந்து திறமையற்ற அரசாங்கமாக உள்ளது. தமிழர்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக பொருளாதாரத்தை இந்த அரசு தவறாக கையாண்டு வருகிறது. இவர்களின் செயல்பாடுகள் தமிழ் கலாச்சாரத்தை பெரிதும் பாதித்துள்ளன. தமிழக மக்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது” என கூறினார்.

இதையும் படிக்க :  திருப்பூரில் தீவிரவாதிகள் கைது: திமுக அரசுக்கு பழனிசாமி சரமாரி கேள்வி

தொடர்ந்து பேசிய அவர், ”ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்ட அதே தோல்வி தான் தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட போகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரே நோக்கம், வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்குவது தான். அதற்காக விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எங்களுடைய என்டிஏ கூட்டணி ஆட்சியில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்புகள் புதிதாக உருவாக்கும் நோக்கத்தில், பல புதிய நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதையும் படிக்க :  மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - வழங்கப்படும் உணவின் விவரம்

ஏழைகளுக்கு தரமான கல்வி, மருத்துவம், வீடுகள் உறுதி செய்யப்படும். தமிழ் பண்பாடு மற்றும் தமிழர்களின் பெருமையை பாதுகாக்க இந்த என்டிஏ கூட்டணி உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழ் மொழி, தமிழர்களின் பண்பாடு, தமிழர்களின் பெருமையை பேணி பாதுகாக்க இந்த கூட்டணி உறுதியாக உள்ளது. எங்களுடைய என்டிஏ கூட்டணி ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல் உள்ளது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவாக இருக்கிறது. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘‘இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது’’: நயினார் நாகேந்திரன்
Next Article தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.