Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, October 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»மறக்க முடியுமா? – விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள் – கதறவிட்ட தோனி படை

மறக்க முடியுமா? – விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள் – கதறவிட்ட தோனி படை

March 23, 20262 Mins Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில் வங்கதேச ரசிகர்களின் வங்கதேச வீரர்களின் அழுகையாக மாறியது தெரியுமா? அன்று தோனி படை, குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய அந்தக் கடைசி ஓவரை மறக்கவும் முடியுமோ!!

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல போட்டிகள் இருந்தாலும், 2016-ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியை எந்தவொரு ரசிகரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தோல்வியின் பிடியிலிருந்து இந்தியா மீண்டு வந்த அந்தத் தருணம் குறித்து, வங்கதேச வீரர் மஹ்முதுல்லா தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர்- தோனியின் அட்டகாச ஃபீல்ட் சேஞ்ச்!

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சுரேஷ் ரெய்னாவின் (30 ரன்கள்) அதிரடியால் 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்திருந்தது. இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம், கடைசி ஓவர் வரை வெற்றியைத் தன் வசமே வைத்திருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.முஷ்பிகுர் ரஹீம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, வங்கதேசத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கருதினோம்.

இதையும் படிக்க :  ஃபின் ஆலன் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது நியூஸி!

ஆனால், அடுத்த இரண்டு பந்துகளில் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து ஹர்திக் பாண்டியா கடும் அதிர்ச்சி அளித்தார். முஷ்பிகுர் ரஹிம் பாண்டியா வீசிய பந்தை பவுண்டரி அடித்து வெல்ல வேண்டும் என்ற ஆசையில் தூக்கி அடிக்க பந்து ஷிகர் தவன் கையில் டீப்பில் அகப்பட கேட்ச் அவுட் ஆனார்.

அப்போது ரன்னர் பேட்டர் கிராஸ் ஓவர் செய்யலாம். அதனால் அடுத்த பந்தை மஹ்முதுல்லா எதிர்கொண்டார். அடுத்த பந்து தி எவர் கிரீன் எம்.எஸ்.தோனி செய்த அட்டகாச பீல்ட் சேஞ்ச் மேட்ச் சேஞ்ச் என்றுதான் கூற வேண்டும். ஆஃப் திசையில் இருந்த ரவீந்திர ஜடேஜாவைக் கொண்டு போய் மிட் விக்கெட்டுக்கும் லாங் ஆனுக்கும் இடையே ‘கண்ட்ரி’பகுதியில் பவுண்டரி அருகே கொண்டு நிறுத்தினார். மஹமுதுல்லா நேராக அவர் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதுதான் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பேட்ஸ்மேன் சுவகதா ஹோம் பந்தை அடிக்கத் தவறினார். அப்போது விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி, கையுறையைக் கழற்றிவிட்டு மின்னல் வேகத்தில் ஓடி வந்து ஸ்டம்புகளைத் தட்டி, முஸ்தபிசுர் ரஹ்மானை ரன்-அவுட் செய்தார். இதன் மூலம் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிக்க :  லோர்கன் டக்கர் 94 ரன்கள் விளாசல்: அயர்லாந்து அணி அபார வெற்றி

விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள்:

இந்தத் தோல்வி குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மஹ்முதுல்லா, “அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகவும் துயரமானது மற்றும் இதயத்தை உடைக்கும் சம்பவம். நாங்கள் மைதானத்திலேயே அழுதோம். ஹோட்டலுக்குச் சென்ற பிறகும் நானும், முஷ்பிகுர் ரஹீமும் விடிய விடிய அழுதோம். இந்தியாவை வீழ்த்தும் மிக நெருக்கமான வாய்ப்பு அது.

மேலும் சிங்கிளாக எடுத்து ரிஸ்க் இல்லாமல் ஆடி வென்றிருக்கலாம். ஆனால் பெரிய ஷாட் அடித்து வெற்றியைத் தேட நினைத்தது ஒரு முட்டாள்தனமான முடிவு” என்றார் மஹமுதுல்லா.

146 ரன்களை வைத்துக் கொண்டு வெல்வதெல்லாம் தோனியினால் மட்டுமே முடியும். அதனால்தான் இந்தப் போட்டியை மறக்க முடியாது. 2016 உலகக்கோப்பையில் இந்த வெற்றியின் மூலம் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியா, மும்பையில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது வேறொரு துயரக்கதை.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஎடை குறைக்க வேண்டுமா? இந்தவொரு சீக்ரெட்டை தினமும் பின்பற்றுங்க!
Next Article ‘‘திமுக ஆட்சி தொடர்ந்தால் இமாச்சலப் பிரதேச நிலைதான் தமிழகத்துக்கும் ஏற்படும்’’: அன்புமணி

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,045 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,266 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,204 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,045 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,266 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,204 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.