Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” – பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி

“பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் மத மாற்ற தடைச் சட்டம்” – பஞ்சாபில் அமித் ஷா வாக்குறுதி

March 14, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள கில்லி சஹலான் பகுதியில் நடைபெற்ற மாற்றத்துக்கான பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். சிரோமணி அகாலி தளத்துடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய அமித் ஷா, ‘‘பஞ்சாபில் பாஜக ஒரு துணை சக்தியாக, சின்ன தம்பியாக (கூட்டணியின் சிறிய கட்சியாக) செயல்பட்டக் காலம் முடிந்துவிட்டது.

இன்றிலிருந்து பாஜக பஞ்சாபில் தனக்கென ஒரு சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரச்சாரத்தை தொடங்குகிறது. நீங்கள் (மக்கள்) காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை சோதித்துப் பார்த்துவிட்டீர்கள். இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளியுங்கள். போதைப் பொருள் மற்றும் கடன் சுமையில் இருந்து பஞ்சாபை மீட்கும் வகையில் இரட்டை இன்ஜின் அரசு செயல்படும்’’ என உறுதியளித்தார்.

இதையும் படிக்க :  ‘‘அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்கவைக்கும் ஒப்பந்தம்’’ - எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பஞ்சாபில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக, சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்தது. எனினும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் காரணமாக 2020ல் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது. இதையடுத்து, 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 73 தொகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிட்டது.

இந்த தேர்தலில், 6.60% வாக்குகளைப் பெற்ற பாஜக, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் 19% வாக்குகளைப் பெற்றது. இதன் காரணமாக, 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது.

பஞ்சாபின் இந்து மற்றும் சீக்கிய வாக்காளர்களின் ஆதரவை திரட்டும் விதமாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என அமித் ஷா உறுதி அளித்தார். ‘‘நமது சீக்கிய குருமார்கள் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  மக்களவையில் ஊதியம், சலுகை பெறாத 2 எம்பிக்கள் - ஆர்டிஐ தகவல்

ஆனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், இத்தகைய மதமாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைத் தங்களின் வாக்கு வங்கியாகக் கருதுகின்றன. 2027 தேர்தலில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை அளியுங்கள். நாங்கள் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவோம்’’ என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஏடிஎம் ஆக பஞ்சாப் அரசாங்கத்தை, முதல்வர் பகவந்த் மான் மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அமித் ஷா, ‘‘நாட்டில் நடைபெறும் ஹெராயின் கடத்தலில் 45% பஞ்சாப் மாநிலத்துடன் தொடர்புடையது. பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை நாங்கள் வேரறுப்போம்.

நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 ரத்து விஷயத்திலும் எப்படி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தோமோ அதைப்போல போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதிலும் உறுதியாக செயல்படுவோம்’’ என்று உறுதி அளித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஹேப்பி நியூஸ் : தொடங்கியது வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை
Next Article “போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” – பிரதமர் மோடி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.