Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மக்களவையில் ஊதியம், சலுகை பெறாத 2 எம்பிக்கள் – ஆர்டிஐ தகவல்

மக்களவையில் ஊதியம், சலுகை பெறாத 2 எம்பிக்கள் – ஆர்டிஐ தகவல்

March 11, 20262 Mins Read4 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாடாளுமன்ற மக்களவையில் 2 எம்பிக்கள் தங்களது ஊதியங்களைப் பெறுவதில்லை. இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

18-வது நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 541 எம்பிக்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 543 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. ஆர்டிஐ-யில் வெளியானத் தகவலின்படி மொத்தம் 481 எம்பிக்கள் தங்கள் மாத ஊதியங்களைப் பெறுகின்றனர். இவர்களில் இரண்டு எம்பிக்கள் தங்கள் மாத ஊதியத்தை வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.

பாஜகவின் நவீன் ஜிண்டாலும், காங்கிரஸின் டாக்டர் பிமோல் அகோய்ஜாம் ஆகிய இருவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பாஜகவின் நவீன், ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதி எம்பி ஆவார். பிரபலத் தொழிலதிபரான இவர், ஹரியனாவில் புகழ்பெற்ற குருஷேத்ரா பல்கலைக்கழகம் நிறுவி அதன் வேந்தராகவும் உள்ளார். இதற்கு முன் ஜிண்டால், 2004-ல் எம்பியாக தேர்வாகி 2014 வரை அப்பதவியை வகித்திருந்தார்.

இதையும் படிக்க :  திருப்பதியில் அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு !

மற்றவரான காங்கிரஸின் பிமோல், மணிப்பூரின் இம்பால் தொகுதி எம்பி. இவர், டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் சமூக அறிவியல் துறை பேராசிரியர். மணிப்பூரைச் சேர்ந்த இவர் அதன் மைத்தி சமூகத்தைச் சேர்ந்தவர்.

இந்த இரண்டு எம்பிக்களும் தங்கள் ஊதியத்தை மட்டும் அன்றி தனக்காக அரசு அளிக்கும் இதர சலுகைகளையும் பெற மறுத்துவிட்டனர். இதன்மூலம், பாஜகவின் ஜிண்டாலும், காங்கிரஸின் பிமோலும் தங்கள், பொது சேவையில் அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்களது தேர்தல் பிரமாணப் பத்திரங்களின்படி, இருவரது சொத்துகளில் அதிக வேறுபாடும் காணப்படுகிறது. தொழிலதிபரான நவீன் ஜிண்டாலுக்கு ரூ.1,241 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. பேராசிரியரான முனைவர் பிமோல் அகோய்ஜாமுக்கு ரூ.97 லட்சம் சொத்துகள் மட்டுமே உள்ளன. இருவருக்கும் இடையே இந்த நிதி இடைவெளி இருந்தபோதிலும், இருவரும் சம்பளம் பெறாமல் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிக்க :  மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்பு

சம்பளம் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ வசதிகளையும் முற்றிலுமாக நிராகரித்த ஒரே எம்.பி. ஜிண்டால் மட்டுமே. இவர்கள் போல் அன்றி, நாடாளுமன்ற எம்பிக்களில் தொடர்ந்து ஊதியம் பெறும் கோடீஸ்வரர்களும் உண்டு.

இவர்களில் முக்கியமானவராக ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி உள்ளார்.

இந்த குண்டூர் எம்பியின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடிக்கும் அதிகம். பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவதாக செவெல்லா தொகுதி எம்பியான கோண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி ரூ.4,568 கோடி சொத்துக்களுடன் உள்ளார். இவர், பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றவர்.

ஆர்டிஐ பதிலில் மாத ஊதியம் பெறும் எம்பிக்களாக 481 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளப் பட்டியலில் பெயர்கள் இல்லாத மீதமுள்ள எம்.பி.க்களின் நிலையை ஆர்டிஐ தெளிவுபடுத்தவில்லை.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேகாலயாவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு
Next Article 12 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி-யாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.