Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, October 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை: தாலுகா சட்டப்பிரிவை ஏற்படுத்த ஐகோர்ட் பரிந்துரை

அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை: தாலுகா சட்டப்பிரிவை ஏற்படுத்த ஐகோர்ட் பரிந்துரை

March 4, 20262 Mins Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அ​தி​காரி​கள் அரசு சொத்​துகளை பாது​காப்​ப​தில் அதிக அக்​கறை காட்​டு​வ​தில்லை என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

ராம​நாத​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சேது மாதவன், வேல்​முரு​கன் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், எங்​கள் நிலப் பிரச்​சினை தொடர்​பாக 2001-ல் ராம​நாத​புரம் மாவட்ட நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​ய​வும், நிலப் பிரச்​சினை​களை கையாள்​வது தொடர்​பாக அரசு அதி​காரி​களுக்கு உரிய உத்​தரவு பிறப்​பிக்கவும் கோரப்​பட்​டது.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி செந்​தில்​கு​மார் பிறப்​பித்த உத்​தர​வு:

இந்த வழக்கு அரசு புறம்​போக்கு நிலத்தை பயன்​படுத்​து​வது தொடர்​பானது. இந்த வழக்​கில் ஒருதலைப்​பட்​ச​மாக உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

ஆனால், ஆட்​சி​யர் மீது நடவடிக்கை இல்லை. ஒருதலைப்​பட்​ச​மான தீர்ப்பு வழக்கு தள்​ளு​படி​யான நிலை​யில், அதற்கு எதி​ராக அரசு தரப்பு மேல்​முறை​யீடு செய்​ய​வில்லை. இதிலிருந்து அதி​காரி​கள் அரசு சொத்​துகளை பாது​காப்​ப​தில் அதிக அக்​கறை காட்​டு​வ​ தில்லை என்​பது தெரி​கிறது.

இதையும் படிக்க :  கனமழையால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்தது

பொது நிலங்​களின் பாது​காவல​ராக இருக்​கும் அரசாங்​கம், மதிப்​பு மிக்க அரசு சொத்​துகள் சம்​பந்​த​மாக வழக்கு தொடர்ந்​தால் அதனை அமை​தி​யாக பார்த்​துக் கொண்டு இருக்​கக் கூடாது.

எனவே, இந்த வழக்கு தொடர்​பாக ராம​நாத​புரம் மாவட்ட ஆட்​சி​யர் மீது வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்மை முதன்​மைச் செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மேலும் அவர் அரசு நிலங்​களை பாது​காப்​பது, வழக்கை சந்​திப்​பது போன்ற விவ​காரங்​களில் மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு வழக்​கறிஞர்​கள் மற்​றும் வரு​வாய் அதி​காரி​களுக்கு தெளி​வான வழி​காட்​டு​தல்​களை பிறப்​பிக்க வேண்​டும்.

அதில் நீதி​மன்ற வழக்​கு​களில் அரசு அதி​காரி​களை எதிர்​தரப்​பாகச் சேர்க்​கும்​போது எடுக்க வேண்​டிய கட்​டாய நடவடிக்​கைகள், உத்​தர​வு​களை ரத்து செய்​வதற்​கான மனு, மேல்​முறை​யீடு​கள் மற்​றும் தாமதத்தை மன்​னிப்​ப​தற்​கான மனுக்​கள், ஆட்​சி​யர், மாவட்ட வரு​வாய் அதி​காரி மற்​றும் வரு​வாய் பிரிவு அதி​காரி​களால் கண்​காணிக்​கப்​படும் வகை​யில் ஒவ்​வொரு தாலு​கா​விலும் ஒரு சட்​டப் பிரிவை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்​டும்.

இதையும் படிக்க :  சுங்க வரி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

வரு​வாய் அதி​காரி தலை​மையி​லான சட்​டப் பிரிவு, அரசு ஒரு தரப்​பாக உள்ள அனைத்து உரிமை​யியல் வழக்​கு​களை​யும் அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்து, சரி​யான நேரத்​தில் பொருத்​த​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்படு​வதை உறுதி செய்​யும்.

அவ்வப்​போது அறிக்​கைகள் நில நிர்வாக ஆணை​யருக்​கும், அரசாங்​கத்​தின் கூடு​தல் தலை​மைச் செயலருக்​கும் அனுப்ப வேண்​டும். இதனை அதி​காரி​கள் பின்​பற்​றும் வகை​யில் 6 மாதத்​தில் அரசு உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்.

மதுரை அமர்​வின் அதி​கார வரம்​புக்​குள் அரசு எந்​தெந்த வழக்​கு​களில் எதிர்​மனு​தா​ர​ராக உள்​ளது என்றும், எடுக்​கப்​ பட்ட நடவடிக்​கைகள் குறித்​தும் வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை​ கூடு​தல் தலை​மைச் செயலர் 4 மாதத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை மார்ச் 16-க்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்
Next Article புதிய தமிழகம் யாருடன் கூட்டணி? – கோவையில் நாளை ஆலோசனை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,046 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,269 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,205 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,046 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,269 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,205 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.