Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பூந்தமல்லி, வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

பூந்தமல்லி, வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

March 1, 20262 Mins Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

4 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுக்குப் பின்னர், பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அனுமதி வழங்கினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இவற்றில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 4வது வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி, போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில், சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டது.

இதையும் படிக்க :  பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

அப்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு, பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி, வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மேற்கொண்டார்.

பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து முதல் இரண்டு நாளும், அதனைத்தொடர்ந்து மூன்றாவது நாள் மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியும், நான்காவது நாள் மெட்ரோ அலுவலகத்தில் இருந்தும் ஆய்வு செய்தார்.

இதையும் படிக்க :  என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் தாம்பரம் போக்குவரத்து அதிகாரி யுவராஜ்

மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயிலின் அடியில் உள்ள உபகரணங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ரயிலின் இழுவை அமைப்பு (traction system) ஆகியவை சரியாக இயங்குகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அதேபோல் ரயில்கள் மோதிக் கொண்டால் எத்தனை பெட்டிகள் சேதமடையும் என்பதை அறிய, அதன் உருவகப்படுத்துதல் வடிவமைப்பையும் (simulation design) ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவதற்கு எவ்வளவு தூரம் தேவைப்படுகிறது என்பதை அறிய, அவசர கால பிரேக்குகளைப் பயன்படுத்தியும் சோதனைகள் நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சோதனை செய்த பின் பூந்தமல்லி, வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேல்முறையீடு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக விசாரிக்க கோர்ட் உத்தரவு
Next Article டி20 உலகக் கோப்பை 2025: வெற்றி பெற்றும் வெளியேறிய பாகிஸ்தான்; அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,699 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,090 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,699 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,090 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.