Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»கட்டணம் கேட்டு பட்டியலின மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுமை: திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பதா?- அன்புமணி கேள்வி

கட்டணம் கேட்டு பட்டியலின மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுமை: திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பதா?- அன்புமணி கேள்வி

February 28, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்திய அரசே கட்டணம் செலுத்தும் நிலையில், கட்டணம் கேட்டு பட்டியலின மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுமை: திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு-

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே வழங்கும் நிலையில், ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நான்காம் ஆண்டிலேயே கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எச்சரித்துள்ளன. இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் உயர்கல்வி உதவித் தொகை (Post Matric Scholarship) திட்டத்தின்கீழ் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் குடும்ப ஊதியம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும். அதனால் இந்தக் கட்டணத்தை மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் கேட்கக் கூடாது. முதல் நான்கரை ஆண்டுகளில் ஏதேனும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து இருந்தால், அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் அரசே செலுத்தி விடும். ஆனால், ஐந்தாம் ஆண்டு கட்டணத்தை மாணவர்களிடம் கேட்கவே கூடாது என்பது தான் விதியாகும்.

இதையும் படிக்க :  போர் சுழலுக்கு மத்தியில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி !

ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஐந்தாம் ஆண்டுக்கான கட்டணத்தை நான்காம் ஆண்டின் முடிவிலேயே கட்டி விட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டத் தவறினால் நான்காம் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதனால், மாணவர்களும், அவரது பெற்றோரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

விதிகளை மீறி கட்டணம் செலுத்தும்படி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் நெருக்கடி கொடுக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குனருக்கும் தான் உள்ளது. ஆனால், இதில் தாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை; கட்டண நிர்ணயக் குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குனர் ஒதுங்கிக் கொண்டார். அதனால், கட்டணம் செலுத்த முடியாமல், தாங்கள் தேர்வு எழுத முடியுமா? என்பதும் தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  அமமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் அறிவிப்பு !

சமூகத்தின் அடித்தட்டில் உள்ள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இத்தகைய கல்வி உதவித்தொகைகளை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், அதையும் தாண்டி பட்டியலின, பழங்குடியின மருத்துவ மாணவர்களை தனியார் கல்லூரிகள் கொடுமைப்ப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண்பதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்: வைகோ திட்டவட்டம்
Next Article மார்ச் 3-ல் சந்திரகிரகணம்: பழநி முருகன் கோயிலில் காலை 10.30 வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.