மேஷம்: உங்களது கற்பனை வளத்தால் அனைவரையும் மகிழ்வீப்பீர்கள். வெற்றிக்கனியைச் சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. நீங்கள் சாதனையாளர் என்றாலும், அளவுக்கு மீறி பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: இன்று பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாகக் நேரத்தை கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைக் கழிக்க அவர்களை அழைப்பீர்கள். இன்று முழுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவை சாப்பிடவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.
மிதுனம்: இன்று உங்களுக்கு வருத்தமான மற்றும் பதற்றமான மனநிலை இருக்கும். உங்களது உணர்வை வெளிப்படுத்துவதன் மூலம், காதல்துணையிடம் மறைந்திருக்கும் அன்பை பெறும் வாய்ப்பு உள்ளது.
கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாததால், உங்கள் முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பழகவும்.
சிம்மம்: முடிவுகளை எடுப்பதற்காக மற்றவர்களின் கருத்துக்களை கேட்கக்கூடும். மற்றவர்கள் கூறுவதை பொறுமையாகக் கேட்க வேண்டும். உங்களுக்கு தன்னம்பிக்கை இன்று குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் தவிர்ப்பது நல்லது.
கன்னி: நீங்கள் இன்று அதிக புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களது திறமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த கலைஞராக திகழ்வீர்கள். ஆடல் மற்றும் பாடல் கலையை தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்குவீர்கள்.
துலாம்: நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த சட்ட பிரச்சினைகள், இன்று நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்துக்கு வெளியிலோ தீர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்று வேலைப்பளு குறைவாக இருக்கலாம். சில பிரச்சினையான சூழ்நிலைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்: இன்று நீங்கள், விதிமுறைகளின் படி சரியாகச் செயல்படுவீர்கள். பணியிடத்திற்கு முதலில் சென்று, நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து, மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வீர்கள்.
தனுசு: இன்று, நீங்கள் தீவிரமான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களிடம் எண்ணத்தை பகிர்ந்துகொள்ள முயல்பவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. நீங்கள் சந்திக்கும் நபர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டு அறிந்து, அமைதியாக செயல்பட்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
மகரம்: வேலைப்பளுவின் காரணமாக இன்று அதிகம் பாதிக்கப்படுவீர்கள். இருப்பினும் திறமையாக செயல்பட்டு பணிகளை நிறைவு செய்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை கவனமாக யோசித்து செயல்படுத்தி, தவறுகள் ஏதும் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
கும்பம்: இன்று, வெளிநாட்டிலிருந்து, உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நாள் முழுவதும் மனதில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் மகிழ்ச்சியில் சுற்றியிருக்கும் அனைவரும் பங்கேற்று கொண்டு மகிழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.
மீனம்: பணியில் இருப்பவர்களுக்கு இன்று மிகவும் சிறந்த நாளாக இருக்கும். அலுவலகம் அல்லது பணியிடத்தில், நீங்கள் பணிகளை நிறைவு செய்து சாதனை படைப்பீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் விருப்பமுள்ளவர்கள், தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

