எழும்பூர் – நுங்கம்பாக்கம் இடையே மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் சென்னை கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏப்ரல் 5ம் தேதி வரை குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் மின்சார ரயிலில் தினசரி பயணித்து வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் ரயில் நிலையங்கள் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் – நுங்கம்பாக்கம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன.

