Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு, ஆனால்…” – அசாமில் பிரதமர் மோடி பேச்சு

“காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு, ஆனால்…” – அசாமில் பிரதமர் மோடி பேச்சு

February 14, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்து ஆட்சி நடத்தியது கட்சி காங்கிரஸ் என்று குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, பாஜக அதனை அஷ்டலட்சுமியாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு குவஹாத்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்தது. ஆனால், எங்கள் அரசு வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வட கிழக்கு மாநிலங்களை நாங்கள் அஷ்டலட்சுமியாகப் பார்க்கிறோம். அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

காங்கிரஸ் இந்தியாவை ஒரு தேசமாகக் கூட கருத மறுக்கிறது. இந்திய தாய் மீது சிறிதளவு மரியாதைகூட காட்டாதர்கள் நாட்டின் நலனுக்காக ஒருபோதும் பாடுபட முடியாது. வட கிழக்கு மாநிலங்களில் நிலவிய மிக மோசமான உள்கட்டமைப்பு மக்களின் மனங்களில் இன்னமும் உள்ளது. இன்று வாகனங்கள் ஓடுவது மட்டுமல்ல, விமானங்கள் கூட தரையிறங்கக்கூடிய வகையில் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இது பெருமைக்குரிய தருணம். அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்த எனது அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அசாம் மக்களின் மனநிலை தற்போது மாறி இருக்கிறது.

இதையும் படிக்க :  NLC : தமிழக மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு வாக்குவாதம் !

பாஜக அடைந்திருக்கும் உயரத்துக்கான முழு பெருமையும் அதன் தொண்டர்களையேச் சாரும். அமைப்பின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையிலான தொண்டர்களை நாங்கள் கொண்டுள்ளோம். நாங்கள் அனைவரும் ஒரு மந்திரத்தால் ஒன்றுபட்டுள்ளோம். பாரத் மாதா கி ஜெய் என்பதே அந்த மந்திரம்.

எனது வாழ்க்கையின் மிகப் பெரிய மரியாதை எதுவென்றால், நான் பாஜக தொண்டராக இருப்பதுதான் என்று பெருமையுடன் கூறுகிறேன். ஒரு பாஜக தொண்டராக, அசாமில் உள்ள நமது தொண்டர்கள் மற்றும் அமைப்பின் வலிமைக்கு நான் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். ஆதி சக்தி மற்றும் அன்னை காமாக்யா ஆகியோருக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிக்க :  காப்பி அடித்ததை கண்டித்த பேராசிரியரை தாக்கிய கல்லூரி மாணவர்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினம் இன்று. இந்த தாக்குதலில் உயிரிழந்த இந்திய தாயின் துணிச்சலான புதல்வர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளை இந்தியா தண்டித்த விதத்தை முழு உலகமும் பார்த்தது. சிலர் இன்றும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘மை லார்ட்’ விமர்சனம்: ராஜுமுருகன் பேசிய வர்க்க அரசியல் எப்படி?
Next Article டி20 உலகக் கோப்பை 2026: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சூப்பர் 8 கனவை தக்கவைத்தது இங்கிலாந்து

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.