Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“திமுக – காங். கூட்டணியில் பிளவு ஏற்படும்” – பழனிசாமி கருத்து

“திமுக – காங். கூட்டணியில் பிளவு ஏற்படும்” – பழனிசாமி கருத்து

February 9, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடியில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி போட்டித் தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிர்வாகத் திறமையற்ற அரசாக திமுக உள்ளது. டிஜிபி நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் கூட யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பிய பட்டியலில் ஒருவரைக் கூட தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கவில்லை.

மூச்சுக்கு 300 முறை இண்டியா கூட்டணி என்று கூறி வந்த ஸ்டாலின் இன்று அதுகுறித்து வாயே திறப்பதில்லை. திமுக- காங்கிரஸ் இடையே பூசல் வந்துவிட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும். அப்படித்தான் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அண்மையில் கனிமொழி டெல்லிக்கு சென்று ராகுலை சந்தித்து பேசியும் தீர்வு காண முடியவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழு இதுவரை ஏன் பேசவில்லை.

இதையும் படிக்க :  சேலத்தில் 13-ந் தேதி விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் - காவல்துறை அனுமதி கோரி தவெகவினர் மனு

என்டிஏ கூட்டணி பொருந்தும் கூட்டணியா? இல்லையா? என ஸ்டாலின் முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் முடிவு செய்வர். தேர்தலுக்குப் பிறகு யார் 200 தொகுதியில் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக- பாஜக கூட்டணியில் சேர மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுகவுக்கு திட்டங்களுக்கு பெயர் வைப்பது தவிர வேறு வழியில்லை. திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அது ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.

விஜய் ஊழல்வாதி என்பதில் அவர் ரூ.1.50 கோடி வரி கட்டாததே சாட்சி. நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துள்ளது. ஏதோ ஒரு கட்சி ஆரம்பித்தார். கரூரில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. அதன் பிறகு அவர் 72 நாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்த பிறகு துணிந்து நின்று அதற்கு தீர்வு காண்பது தான் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு கடமை.

இதையும் படிக்க :  நேஷனல் ஹெரால்டு வழக்கு : போராட்டத்தில் ஈடுப்பட்ட ராகுல் காந்தி கைது !

அப்போது அலுவலகத்தை கூட மூடிவிட்டனர். இது தான் அந்த கட்சியின் நிலைமை. இதுவரை 181 தொகுதியில் எழுச்சிப் பயணம் முடித்துள்ளேன். வரும் 15-ம் தேதி பவானிசாகரில் பயணம் தொடங்கி, தொடர்ந்து சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியில் பிரச்சாரம் நடத்தப்படும். செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அவரைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற திருமண விழாவில் பழனிசாமி பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சி முடிவடையும்போது 2021-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி தான் கடன் இருந்தது. கரோனா காலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டது. இப்படியான சூழலிலும் சிறப்பான ஆட்சியை அதிமுக அரசு வழங்கியது.

2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இதுவரை ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். மக்களின் தலைகளில் கடனை சுமத்தியது தான் ஸ்டாலின் அரசின் சாதனை’’ என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: நயினார் நாகேந்திரன் தகவல்
Next Article “திராவிட கட்சிகள் வந்த பிறகே தமிழகத்தில் ஊழல் அதிகரிப்பு” – பாரிவேந்தர் குற்றச்சாட்டு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.