Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணிகள் – குரூப் ‘சி’ ஒரு பார்வை

3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணிகள் – குரூப் ‘சி’ ஒரு பார்வை

February 6, 20265 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘சி’ பிரி​வில் இரு முறை சாம்​பியன்​களான மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இங்கிலாந்துடன் இத்​தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணி​களும் இடம்பெற்​றுள்​ளன. இது குறித்த ஒரு பார்​வை…

இங்​கிலாந்​து: ஆஷஸ் தொடரில் ஏற்​பட்ட படு​தோல்வி மற்​றும் சர்​வ​தேச ஒரு​நாள் மற்​றும் டி20 போட்​டிகளில் தொடர்ச்​சி​யான சறுக்​கல்​களுக்​குப் பிறகு, இங்​கிலாந்து அணி டி20 உலகக் கோப்​பை​யில் ஒரு புதிய தொடக்​கத்​தைத் தேடக்கூடும்.

அதிரடி பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் ஆட்​டத்தை வென்று தரும் பந்​து​வீச்​சாளர்​களைக் கொண்ட ஒரு வலிமை​யான அணி​யாகக் திகழும் இங்​கிலாந்து அணி 2010 மற்​றும் 2022-ம் ஆண்டுகளில் சாம்​பிய​ன் பட்டம் வென்றிருந்தது. அப்போது 3-வது முறை​யாக கோப்​பையை வெல்​லும் நோக்கத்​தில் களமிறங்​கு​கிறது.

கடந்த ஆண்டு ஜாஸ் பட்​லருக்​குப் பதிலாக ஒரு​நாள் போட்டி மற்​றும் டி 20 அணி​யின் கேப்​ட​னாக ஹாரி புரூக் பொறுப்​பேற்​றார். அவர், ஐசிசி தொடரில் முதன்​முறையாக கேப்​ட​னாக செயல்பட உள்​ளார். இங்கிலாந்தின் மிக​வும் திறமை​யான அனைத்து வடிவ கிரிக்​கெட் வீரர்​களில் ஒரு​வ​ரான 26 வயதான ஹாரி புரூக், சமீப​கால​மாக தவறான காரணங்​களுக்​காகச் செய்திகளில் இடம்​பிடித்து வரு​கிறார்.

சமீபத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் நடந்த ஆஷஸ் தொடருக்கு முன்​பு, இங்​கிலாந்து அணி​யின் நியூஸிலாந்து சுற்​றுப்​பயணத்​தின் போது இரவு விடுதி காவலா​ளி​யுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டதற்​காக, கடந்த மாதம் இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யத்​திடம் மன்​னிப்பு கோரி​னார்.

இழந்த நற்​பெயரை திரும்ப பெறும் வகை​யில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாரி புரூக், மட்டை வீச்​சில் தாக்கத்தை ஏற்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரில் ஜாஸ் பட்​லர், பில் சால்ட், பென்டக்​கெட் பலம் சேர்ப்​பவர்​களாக உள்​ளனர். நடு​வரிசை​யில் டாம் பேன்​டன், ஹாரி புரூக், ஜேக்​கப் பெத்தேல் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும் திறன்கொண்​ட​வர்​கள்.

பலவீனம் என்று பார்த்​தால் பந்​து​வீச்​சில் காயம் காரணமாக மார்க் வுட் இடம்​பெறாதது​தான். மேலும் ஜோப்ரா ஆர்ச்​சர் தற்​போது​தான் காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்​ளார். எனினும் ஜோஷ் டங்க் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக திகழ்​கிறார். லூக் வுட், சேம் கரண், ஜேமி ஓவர்​டன் ஆகியோ​ரும் வேகப்​பந்து வீச்​சில் உறுதுணை​யாக செயல்​படக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் அனுபவம் வாய்ந்த ஆதில் ரஷித் பலம் சேர்க்​கக்​கூடும்.

லியாம் டாவ்​சன், வில் ஜேக்​ஸ், ரேஹான் அகமது ஆகியோ​ரும் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். சமீபத்​தில் இலங்கை அணிக்கு எதி​ரான டி20 தொடரை இங்​கிலாந்து அணி வென்​றிருந்​தது. மேலும் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் நடை​பெற்ற இருதரப்பு டி 20 தொடர்​களில்​ இங்​கிலாந்​து அணி ஒரே ஒரு தொடரை மட்​டுமே இழந்​துள்​ளது.

இங்​கிலாந்து அணி விவரம்: ஹாரி புரூக் (கேப்​டன்), பென்டக்​கெட், ஜாஸ் பட்​லர், பில் சால்ட், டாம் பேன்​டன், ஜேக்​கப் பெத்​தேல், வில் ஜாக்​ஸ், ஜேமி ஓவர்​டன், சாம் கரண், ஆதில் ரஷித், ரேஹான் அகமது, லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்​சர், ஜோஷ் டங்க், லூக் வுட்.

இதையும் படிக்க :  டி20 உலகக் கோப்பை 2026: எல்லிஸ், ஜாம்பா பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது அயர்லாந்து

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து அணி 7-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. இம்முறை வங்கதேச அணி கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அதேபோன்று இம்முறை அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

ஸ்காட்லாந்தின் வெற்றி வாய்ப்புகள், முக்கிய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பொறுத்தே அமையும், அவர்களில் பிரண்டன் மெக்முல்லனும் ஒருவர். 26 வயதான அவர், சர்வதேச டி20-ல் 7 அரை சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும்.

இதில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான தோல்வியின் போது அவர், அடித்த சிறப்பான 60 ரன்களும் அடங்கும். கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். சர்வதேச டி 20-ல் அவர், சதமும் விளாசி உள்ளார். 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுழற்பந்து வீச்சாளரான மார்க் வாட் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

அணி விவரம்: ரிச்சி பெரிங்​டன் (கேப்​டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்​சன், கிறிஸ் கிரீவ்​ஸ், ஜைனுல்லா இஹ்​சான், மைக்​கேல் ஜோன்​ஸ், மைக்​கேல் லீஸ்க், ஃபின்லே மெக்​ரீத், பிராண்​டன் மெக்​முல்​லன், ஜார்ஜ் முன்​சி, சஃப்​யான் ஷெரீஃப்​, மார்க்​ வாட்​, பிராட்லி வீல்​.

மேற்கு இந்தியத் தீவுகள்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த அணி ஒரு முறைகூட அரை இறுதியை எட்டவில்லை. 2024-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றிலேயே வெளியேறியது ஏமாற்றமளித்திருந்தாலும், டேரன் சமி பயிற்சியாளராக உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஷிம்ரன் ஹெட்மயர் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பி உள்ளார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர், சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ஷாய் ஹோப் சதம் விளாசியிருந்தார்.

டாப் ஆர்டரில் பிரண்டன் கிங்கும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். ரோவ்மேன் பவல், ஜான்​சன் சார்​லஸ் ஆகியோரும் மட்டையை சுழற்றக் கூடியவர்கள். சுழற்பந்து வீச்சில் அகீல் ஹொசைன் பலம் சேர்க்கக்கூடும். வேகப் பந்து வீச்சில் ஷமர் ஜோசப், ரோமாரியோ ஷெப்​பர்​டு, ஜேசன் ஹோல்​டர் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

ஷாய் ஹோப்

அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்​டன்), ஷிம்​ரன் ஹெட்​மயர், ஜான்​சன் சார்​லஸ், ராஸ்​டன் சேஸ், மேத்யூ ஃபோர்​டு, ஜேசன் ஹோல்​டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்​டன் கிங், குடகேஷ் மோட்​டி, ரோவ்​மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃ​போர்​டு, குவென்​டின் சாம்ப்​சன், ஜெய்​டன் சீல்​ஸ், ரோமாரியோ ஷெப்​பர்​டு.

இதையும் படிக்க :  முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை

இத்தாலி

டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக களமிறங்குகிறது இத்தாலி அணி. இதன் மூலம் அந்த அணி ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 25-வது அணி என்ற பெருமையை பெற உள்ளது. இத்தாலி அணி 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய பிராந்திய இறுதிப் போட்டியில் 2-வது இடம் பிடித்திருந்தது.

இந்தத் தொடரில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இத்தாலி அணி டி 20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணியின் மிதவேகப்பந்து வீச்சாளரான ஹாரி மனென்டி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது சிறப்பான செயல் திறனால் இத்தாலி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

கேப்டன் வெய்ன் மேட்சன், 42 வயதைக் கடந்தாலும், அவரது சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அந்த அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெய்ன் மேட்சன் 61 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்திருந்தார். முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல் ரண்டரான ஜெ.ஜெ.ஸ்மட்ஸ் அணியின் நடுவரிசையில் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். சுழற்பந்துவீச்சிலும் அவர் பலன் கொடுக்கக்கூடியவர்.
வெய்ன் மேட்​சன்

அணி விவரம்: வெய்ன் மேட்​சன் (கேப்​டன்), மார்​கஸ் காம்போபி​யானோ, ஜியான் பியோரோ மீடே, ஜைன் அலி, அலி ஹசன், கிரிஷன் ஜார்ஜ் கலுகமகே, ஹாரி மானென்​டி, அந்​தோனி மோஸ்​கா, ஜஸ்​டின் மோஸ்​கா, சையத் நக்​வி, பெஞ்​சமின் மானென்​டி, ஜஸ்​பிரீத் சிங், ஜேஜே ஸ்மட்​ஸ், கிராண்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிராக்​கா.

நேபாளம்

முன்னாள் ஆஸ்திரேலிய சர்வதேச வீரரான ஸ்டூவர்ட் லா, நேபாள அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். டி20 உலகக் கோப்பையில் விளையாட கிடைத்துள்ள வாய்ப்பை நேபாள அணி சிறந்த முறையில் பன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டக்கூடும்.

அந்த அணியின் பேட்ஸ்மேன்களான குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் 2025-ம் ஆண்டில் முறையே 509 மற்றும் 394 ரன்கள் விளாசி அசத்தி உள்ளனர். இதில் குஷால் புர்டெல் டி 20 சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த 5 நேபாள வீரர்களில் ஒருவர் ஆவார், மேலும் 2024-ம்

ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். துணை கேப்டன் தீபேந்திர சிங்ஐரியும் சர்வதேச டி 20 போட்டியில் சதம் அடித்த வீரராக உள்ளார். சந்தீப் லாமிச்சான் கடந்த ஆண்டு 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அணி விவரம்: ரோஹித் பவுடல் (கேப்​டன்), திபேந்​திர சிங்ஐரி, சந்​தீப் லமிச்​சேன், குஷால் புர்​டெல், ஆசிப் ஷேக், சுந்​தீப் ஜோரா, ஆரிப் ஷேக், பசீர் அகமது, சோம்​பால் கமி, கரண் கே.சி, நந்​தன் யாதவ், குல்​ஷன் ஜா, லலித் ராஜ்பன்​ஷி, ஷேர் மல்​லா, லோகேஷ் பாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதவெக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு இணையதளம்
Next Article “பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை” – சூர்யகுமார்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.