Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ptp»ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், கல்விக் கடன் தள்ளுபடி – கவனம் பெறும் அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், கல்விக் கடன் தள்ளுபடி – கவனம் பெறும் அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

February 4, 20262 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வரும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-மாக உயர்த்தப்படும், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அந்த கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

சமூக ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைகள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அத்தொகையை அரசே ஏற்கும்.
வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

இதையும் படிக்க :  படாளம் ஊராட்சி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் ஆயுத பூஜை விழா மரகதம் குமரவேல் MLA பங்கேற்றார்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசு சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட வாக்குறுதிகள்

குல விளக்குத் திட்டத்தின் மூலம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2,000/- வரவு வைக்கப்படும்.

இதையும் படிக்க :  Electric Car Owners to Pay Road Tax from 2025, Hunt Announces

நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் செய்யலாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகளும், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளும் என்று அரசு சார்பில் இடம் வாங்கி கட்டிக் கொடுக்கப்படும்.

அதே போல, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும்போது, அவர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது 150 நாட்களாக உயர்த்தப்படும்.

ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்’ என கடந்த ஜனவரி 16-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதுணைவேந்தர் நியமனம் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்
Next Article தினமும் 5 நிமிடம் போதும்: ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ஒரே வழி!

Related Posts

ptp

வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்ததாக மத்திய அரசு தகவல்

March 27, 2026
ptp

ஸ்டீல் டப்பா vs கண்ணாடி டப்பா: எதில் சாப்பாடு கொண்டு போவது ஆரோக்கியம்?

March 18, 2026
ptp

பாகிஸ்தான் பரிதாபம் தொடர்கிறது: வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்தது!

March 16, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.