தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி அவரை கவுரவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48), தூய்மைப் பணியாளர். இவர் தி.நகரில், வண்டிக்காரன் பகுதியில் கடந்த மாதம் 11-ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார்.

