இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 3,656.74 புள்ளிகள் உயர்வுடன் மொத்தம் 85,323.20 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் தொடங்கி உள்ளது.
இதேபோன்று, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 1,219.65 புள்ளிகள் அதிகரித்து மொத்தம் 26,308.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பித்துள்ளது.
மத்திய பொது பட்ஜெட், தங்கம் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் சில நாள்களாக இறக்கத்தை கண்டு வந்த பங்குச் சந்தை வாரத்தின் இரண்டாவது நாளான இன்று நல்ல ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று ஏற்றம் காணப்படுவதாக பொருளதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

