Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் செல்லாது – ஆளுநர் ரவி எச்சரிக்கை

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் செல்லாது – ஆளுநர் ரவி எச்சரிக்கை

February 3, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாரதியார், பாரதிதாசன், மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமனத்திற்கான பெயர் பட்டியலை பரிந்துரைப்பதற்கான தேர்வுக் குழுக்களை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்த தேர்வுக் குழுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிக்கால நீட்டிப்பு தொடர்பான உண்மை மற்றூம் சட்ட்ப்பூர்வ நிலைப்பாட்டை பதிவு செய்ய மக்கள் மாளிகை விரும்புகிறது.

யூஜிசி விதிமுறைப்படி, துணைவேந்தர் நியமனத்துக்கான பெயர் பட்டியலை பரிந்துரைக்கும் தேர்வுக்குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தரப்பில் ஒரு பிரதிநிதி இடம்பெற வேண்டும். யுஜிசியின் இந்த விதிமுறைக்கு முரணாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழு பரிந்துரையின் பேரில் செய்யப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாதது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களின் கீழ், தமிழ்நாட்டின் ஆளுநர் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார். வரலாற்று ரீதியாக, சட்டப்பூர்வ விதிகளுக்கு இணங்க, முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களை கொண்ட பட்டியலிலிருந்து வேந்தரால், துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க :  தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு !

ஆனால், தமிழக அரசு ‘2025-ன் தமிழ்நாடு சட்டம் எண் 16-ன் மூலம் பல்கலைக்கழகச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து, ’வேந்தர்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘அரசு’ என்ற சொல்லை மாற்றியமைத்து, இனிமேல் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டம் சவால் நிறைந்தது என்பதால், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடமிருந்து எடுத்து அரசிடம் ஒப்படைக்கும் அம்சங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக யூஜிசியின் பிரதிநிதி இல்லாமல் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவது கவலைக்குரிய விஷயம். வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், தேர்வுக்குழுக்களின் பதவிக்காலத்தை நீடித்தும், துணைவேந்தர் பதவிக்கான பெயர் பட்டியலை மார்ச் 21ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக அரசால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுக்கள், துணைவேந்தர் தேர்வுக்காக பட்டியலிடப்பட்டவர்களுடன் கடந்த ஜன.24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நேர்க்காணல்களை நடத்தியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும், இடைக்கால உத்தரவுகள் நடைமுறையில் உள்ளபோதும் எடுக்கப்படும் நடவடிக்கை வழக்கு நிலுவையில் உள்ளது என்ற கோட்பாட்டின் கீழ் வரும்.

இதையும் படிக்க :  விஜய் மனைவி மீது அவதூறு பரப்புவோர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தவெகவுக்கு வலியுறுத்தல்

வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்வுக் குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதில் மாநில அரசின் செயல் மற்றும் பட்டியலில் உள்ளவர்களுடன் கலந்துரையாடுவது போன்ற செயல்பாடுகள், நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறுவதாகவும், உத்தரவுகளின் நோக்கத்திற்கு முரணானதாகவும் உள்ளன.

மேலும், தற்போதைய தேர்வுக் குழுக்கள், அவற்றின் தற்போதைய அமைப்பில், தேர்வு செயல்முறையை தொடர்வது சட்டப்படி நிலைத்து நிற்காது. நீதித்துறை தீர்ப்புகளின் நோக்கத்திற்கு முரணானது. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளும் செல்லாததாக்கப்பட வாய்ப்புள்ளது. இது மாநில அரசுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் தவிர்க்க முடியாத சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, ஆளுநர்-வேந்தரால் முதலில் பரிந்துரைக்கப்பட்டபடி, தேர்வுக் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதியை சேர்ப்பதற்கு உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் அல்லது இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, துணைவேந்தர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பது மற்றும் தேர்வுக் குழுக்களின் செயல்பாடுகள் என அனைத்து தற்போதைய நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘விஜய்க்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது’ – நடிகர் அனுமோகன் விமர்சனம்!
Next Article பெண்ணை ஆறு விவகாரம்: ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.