பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்தவர் குர்பஜன்கவுர்.
இவரது கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.
இதனால் குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்ஜீத்கவுர் தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாக அவர் தாக்கி உள்ளார்.
இதை ஹர்ஜீத்கவுரின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.
ஆனால் ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்குகிறார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை செல்போனில் வீடியோ எடுத்த அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"A mother-in-law can never become a mother, and a daughter-in-law can never become a daughter."
Daughter-in-law caught on camera slapping and dragging her elderly mother-in-law by the hair and shamefully abusing her.😡 pic.twitter.com/b1nL9RdsNJ
— ShoneeKapoor (@ShoneeKapoor) October 3, 2025

