தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் . பீலா வெங்கடேசன் (வயது 55). ஐஏஎஸ் அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும்.
பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீலா வெங்கடேசன் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி திருமதி பீலா வெங்கடேசன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.
திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

