தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் அவர்களுக்கு பாஜக மாநில தலைவர் மரியாதை
தமிழுக்கும் தமிழருக்கும் தன் வாழ்நாள் முழுவதும் பெருந்தொண்டாற்றிய ஐயா, தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் இன்று.
“பாமரரும் படிப்பாளியாக வேண்டும், அனைவரும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும், எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திட வேண்டும்” என்ற உயரிய நோக்கில் மிக எளிய தமிழ் நடையைக் கொண்டு தினத் தந்தி நாளிதழை உருவாக்கி, பாட்டாளியையும் வாசிப்பாளியாக்கிய மாபெரும் புரட்சிக்காரர் ஐயா சி. பா. ஆதித்தனார் அவர்கள்!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைக் எதிர்த்து எழுதியதற்காகப் பல தடைகளைச் சந்தித்தும், தனது எழுத்துத் தியாகத்தைத் தொடர்ந்தவர்.
இன்றைய இத் தினத்தில், ஐயா சி. பா. ஆதித்தனார் அவர்களை போற்றி, புகழ் வணக்கம் செலுத்துவோம்!
இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

