தங்கம் விலை உயர்வு என்பது இப்போது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 10 கிராம் தங்கம் 78,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முடிவதற்குள்ளேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.
இந்த விலையேற்றம் திருமண வீடுகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மக்களின் பட்ஜெட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தசரா, தீபாவளி ஆகிய நாட்களில் தங்கம் வாங்குபவர்கள் இந்த ஆண்டு எப்படி தங்கம் வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
செப்டம்பர் 23ம் தேதியன்று, தங்கம் மீண்டும் அதன் சாதனையை முறியடித்து அதன் வரலாறு காணாத உச்சத்தையும் தாண்டியது.
தங்கத்தின் விலை ரூ. 1343 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.113498 என்ற அளவை எட்டியுள்ளது.
இன்று காலை முதல் மதியம் 3 மணி வரை, தங்கம் கிராமுக்கு ரூ.10,500 ஆகவும், பவுனுக்கு ரூ.84,000 ஆகவும் விற்பனையாகி வந்தது.
தற்போது, கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் உயர்ந்துள்ளது.

