தமிழக அரசு சார்பில் 2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை பட்டியல்
இது குறித்து அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய நாட்கள் 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

