நானி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஷ்யாம் சிங்க ராய் திரைப்படம் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு படம்
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக திகழும் நானி நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ஷ்யாம் சிங்க ராய். பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உருவான இத்திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்தார். ராகுல் சன்கிரித்யன் இயக்கிய இப்படத்தை சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆஸ்கர் விருது
இந்நிலையில், ஷ்யாம் சிங்க ராய் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

