விஜய் ஆண்டனி படம்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கொலை. ‘விடியும் முன்’ ‘புகழ்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி குமார் இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கொலை படத்தின் ட்ரைலர் வரும் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#KOLAI #HATYA trailer will be out on 15th August at 6 PM.@DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @Dhananjayang @pradeepfab @siddshankar_ @Panbohra @Bhashyasree @thinkmusicindia @DoneChannel1 @GskMedia_PR @CtcMediaboy pic.twitter.com/VbO0I6QHAy
— vijayantony (@vijayantony) August 13, 2022

