அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ட்ரிக்கர் (Trigger) படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
அதர்வா படத்தின் டீசர்
குருதி ஆட்டம் படத்தை அடுத்து அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ட்ரிக்கர். டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பி.எஸ்.மித்ரன் வசனங்களை எழுதியுள்ளார். ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Extremely excited to present the teaser of our film to you all ! #TRIGGER 💥
#TriggerTeaser 👉https://t.co/Q0g2PiXmJpA @ANTONfilmmaker Directorial @tanyaraviOff @pramodfilmsnew @miraclemoviesin @DesiboboPrateek @ShrutiNallappa @mynameisraahul
TN release by #RomeoPicture pic.twitter.com/vM0nXiyDnK
— Atharvaa (@Atharvaamurali) August 11, 2022
