மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் அறிவிப்பு.
மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம் பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், இம்மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே, அந்தியூர், ஆண்டிபட்டி, மன்னார்குடி, கோபி உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

