எரிபொருள் விலை உயர்வு குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு
நேற்று மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், எரிபொருள் மீதான வரியை மாநில அரசு குறைக்கவில்லை என்ற குற்றசாட்டை வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் மேலும் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது. ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி 1.95 ரூபாய் குறைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 4.95 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது’ என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

