ஆயுதம் ஏந்துபவர்களுக்கு ஆயுதம் மூலமே பதில் கொடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி
கேரள மாநிலம், கொச்சியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கருத்தரங்கில் பேசிய ஆர்.என். ரவி, ‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில் கொடுக்க வேண்டும். இந்திய நாட்டின் ஒற்றுமை எதிராகப் செயல்படுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதக் குழுக்களுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, நாடு முழுவதும் பேர் அதிர்ச்சி அடைந்தது. மேலும், ஒரு சில பயங்கரவாதிகளால் நாடு அவமானப்படுத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், பாலகோட் வான்வழியில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதச் செயலை செய்தால் அதற்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த செய்தி’ என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருது தெரிவித்துள்ளார்.

