தனுஷின் பிறந்த நாள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தொடக்க காலத்தில் தேவதையை கண்டேன், திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்கள் இவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. தொடர்ந்து தனுஷ் நடித்த பொல்லாதவன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனுஷ் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் நடிகர் பிரசன்னா, தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday…🤩 bro don’t kill me for sharing this. I kept it too long for just myself 🥰 pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022

