அம்பை அருகே கோயிலுக்குச் சென்ற சிறுவர்கள் தாமிரபரணி ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறுவர்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில்
ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் விஷ்ணுகுமார் தங்கள் குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது சரவணின் மகன் கார்த்திக் (வயது 8), விஷ்ணுகுமாரின் மகன் ஹரிஷ் குமார் (வயது 10) இவர்கள் இருவரும் கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மாயமாகினர். சிறிது நேரம் கழித்து இருவரும் ஆற்றில் இறந்து மிதந்தனர். பின்னர் சிறுவர்களின் உடலை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

