எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பிரிவு அண்ணன் தம்பி போராட்டம் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணன் தம்பி போராட்டம்
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்கள்
சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழக மக்கள் திமுக அரசு மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிக்க எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டு போகப்போவதில்லை. திமுகவின் மீதுள்ள வெறுப்பில் மக்களே அதிமுகவுக்கு வாக்கு அளிப்பார்கள்’. அதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் ஏற்று கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பினர். பதில் கூறிய அவர், ‘ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்ல கூடாது என்பதே எங்கள் விருப்பம். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம் பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என சேட்ஜியாளர் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்தார்.

