திண்டுக்கலில் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கத்திரிக்கோலால் குத்திக்கொலை
திண்டுக்கல், வடமதுரை அருகே ரெட்டியபட்டி லக்கான் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (39) மனைவி கற்பகம் (30). கருப்புசாமி வடமதுரையில் டைலர் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கருப்புசாமி மது அறிந்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கருப்புசாமிக்கும் அவரது மனைவி கற்பகத்திற்கும் இடையே வாய் தகராறு ஏற்படுட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த கருப்புசாமி அவரது மனைவியை கத்திரிக்கோலால் கடுமையாக கழுத்தியில் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அங்கு கற்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் கருப்புசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

