சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலு குலு படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிடுகிறார்.
குலு குலு படம்
நகைச்ச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகியிருக்கும் படம் குலுகுலு. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின், சந்தானம் இணைந்து நடித்த ஓகே ஓகே, நண்பேண்டா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள குலுகுலு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

