கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை
பல்வேறு நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. அதன்பெயரில் கேரளா மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 11 பேரையும் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், மத்திய அரசு நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உயர்மட்டக் குழுவை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிர கண்காணிப்பு
இந்நிலையில், கேரள எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார்கள். இதனையடுத்து விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை ஆய்வு நடத்தவுள்ளார்.

