ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் படம்
அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜெயிலர் படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

