பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படத்தின் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி கூட்டணி
இயக்குனர் பாலா, நடிகர் சூர்யா கூட்டணியில் 2001ம் ஆண்டு வெளியான படம் நந்தா. இந்த படம் சூர்யாவுக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த கூட்டணியில் இரண்டாவதாக வெளியான பிதா மகன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குபிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் சூர்யா 41. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
முக்கிய அப்டேட்
மேலும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க படத்தில் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்காலிகமாக சூர்யா 41 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இன்று இயக்குனர் பாலாவின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அப்டேட் வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

