நான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும் அதனால் தனக்கு ஜெயலலிதா சொத்துகளில் தனக்கு 50 சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் முதியவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு தமிழத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், கர்நாடக மாநிலம் வியாசராபுரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். 83 வயதான இவர் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘என் தந்தையின் இரண்டாவது மனைவி வேதவள்ளி மூலம் பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார், ஜெயலலிதா. அந்த முறையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் எனது சகோதரர், சகோதரி. இதனால் தீபா, தீபக் போன்று எனக்கும் ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதம் தர வேண்டும்’ என்று வாசுதேவன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

