இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்கை 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளனர்.
தள்ளுபடி
ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனர் பி.ஏ ஜோசப், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி மோதல் போக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி அன்று மனு அனுப்பியிருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்
விதித்து விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

