தனது தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தர வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மகள்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன் தான் வாழ்ந்த காலத்தில் பல சொத்துக்களை வாங்கி இருந்தார். அந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் 271 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவாஜியின் மறைவுக்கு பின் அந்த சொத்துக்களை அவரது வாரிசுக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள். சிவாஜி தனது சொத்துக்களுக்கு உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த சூழலில் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் தங்களுக்கு வரவேண்டிய சொத்துக்களை தராமல் ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உயர்நீதி மன்றம்
அதில் தங்களுக்கு தெரியாமல், தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களான ஆயிரம் சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொய்யாக ஜோடிக்கப்பட்ட உயில் ஒன்றை தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

