முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாரத பிரதமருமான ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்தபோது 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மேற்கண்ட வழக்கு விசாரணையின்போது, “பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகள் சிறையில் உள்ளார். நீங்கள் அவர் விஷயத்தில் இன்னமும் தாமதம் செய்வதை எப்படி ஏற்பது?” என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்#Perarivalan #supremecourtofindia #PesuTamizhaPesu #பேசுதமிழாபேசு pic.twitter.com/HwV1iWjR1U
— pesutamizhapesu (@pesutamizhapesu) March 9, 2022

