சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

