Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பெட்டிக்கடைக்காரர் கொலை வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை

பெட்டிக்கடைக்காரர் கொலை வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை

February 18, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விழுப்​புரம் மாவட்​டம் கிளியனூர் பஞ்​சா​யத்து தலை​வர் பதவிக்​கான தேர்​தல் முன்​விரோதத்​தில் பெட்​டிக்​கடைக்​காரரை கொலை செய்த வழக்​கில் விடுவிக்​கப்பட்ட, முன்​னாள் பஞ்சா​யத்து தலைவி மற்​றும் அவரது மகன்​கள் உள்​ளிட்ட 21 பேருக்கு உயர் நீதி​மன்​றம் ஆயுள் தண்​டனை விதித்​துள்​ளது.

கிளியனூர் அரு​கே​யுள்ள காட்​ராம்​பாக்​கத்​தைச் சேர்ந்த முன்​னாள் பஞ்​சா​யத்து தலை​வர்​களான கிருஷ்ணவேணி தரப்​புக்​கும், வில்​வ​மணி தரப்​புக்​குமிடையே தேர்​தல் முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்​நிலையில், அங்கு பெட்​டிக்​கடை நடத்தி வந்த பாஸ்​கர் என்​பவர், வில்​வ​மணிக்கு ஆதர​வாக வேலை செய்​துள்​ளார்.

ஆனால், தேர்​தலில் கிருஷ்ணவேணி வெற்றி பெற்​று, மீண்​டும் பஞ்​சா​யத்து தலை​வ​ராக பதவி​யேற்​றார். 2013 மே 29-ம் தேதி வில்​வ​மணி தலை​மை​யில், கிராமத்​தில் உள்ள கோயி​லில் பாஸ்​கர் திரு​விழாவை நடத்​தி ​உள்​ளார்.

இதில் ஆத்​திரமடைந்த கிருஷ்ணவேணி மற்​றும் அவரது மகன்​கள் மதன்​ராஜ், மதன்​குமார் மற்​றும் உறவினர்​கள் காத்​த​முத்​து, பார்த்​திபன், ராணி, மூர்த்தி என்ற கிருஷ்ண​மூர்த்​தி, மாரி​முத்​து, சுரேஷ், ஜெய​ராஜ், குமார், முரளி, தாஸ் என்ற சிவப்​பிர​காசம், ஜனார்த்​தனன், சிவக்​கு​மார், ஜெயசேகர், வீரமணி, வேலு, ஜெய​காந்​தன், வினோத்​கு​மார், கருணாநி​தி, ஞான​சேகரன், ராம​தாஸ் ஆகிய 23 பேரும், திரு​விழா முடிந்து வீட்​டில் இருந்த பாஸ்​கரை கத்​தி​யால் குத்​தி​யும், இரும்பு கம்​பி​யால் தாக்​கி​யும் கொலை செய்​துள்​ளனர்.

இதையும் படிக்க :  கோயம்பேட்டில் பரபரப்பு : குப்பை தொட்டியில் கிடந்த கை துப்பாக்கி !

இதுதொடர்​பாக கிளியனூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, கிருஷ்ணவேணி உள்​ளிட்ட 23 பேரை​யும் கைது செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த திண்​டிவனம் கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம், கொலைக் குற்றம் நிரூபிக்கப்​ பட​வில்லை என்று கூறி, 2017-ல் 23 பேரை​யும் விடு​வித்தது.

இதை எதிர்த்து அமுதா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் அமர்​வில் நடந்​தது.

காவல் துறை தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜரானார்.மேல்​முறை​யீட்டு மனு​தா​ர​ரான அமுதா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ். சுரேஷ், இந்த கொலை​யில் ஈடு​பட்​டது தாங்​கள்​தான் என கிருஷ்ணவேணி மகன்​களே முன்​வந்து வாக்குமூலம் அளித்​துள்​ளனர்.

இதையும் படிக்க :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேர் நீதிமன்றத்தில் சரணடைய மார்ச் 13 வரை கால அவகாசம்

இந்​தக் கொலை மனு​தா​ரரின் எதிரிலேயே நடந்​துள்​ளது. அவரும் சாட்​சி​யம் அளித்​துள்​ளார். ஆனால், வழக்​கில் இருந்து அனை​வரும் விடு​தலை செய்​யப் ​பட்​டனர்” என்றார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் குற்​ற​வாளி​கள் என்று தீர்​மானித்​து, திண்​டிவனம் அமர்வு நீதி​மன்​றத் தீர்ப்பை ரத்து செய்தனர்.

மேலும், குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களில் குமார் மற்​றும் ஞான​சேகரன் ஆகியோர் இறந்​து​விட்​ட​தால், அவர்​கள் மீதான வழக்கு கைவிடப்​பட்​ட​தாக​வும், மீதமுள்ள கிருஷ்ணவேணி மற்​றும் அவரது மகன்​கள் உள்​ளிட்ட 21 பேருக்கு ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்​து தீர்ப்​பளித்​தனர். மேலும், மேல்​முறை​யீடு செய்ய ஏது​வாக, தண்​டனையை நிறுத்தி வைத்​தும் நீதிப​தி​கள் உத்​தரவிட்​டனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் ஐக்கியம்!
Next Article ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.