விருத்தாசலம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மாணவியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறை விசாரணை
தொடர்ந்து மாணவியின் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, மாணவி சரியாகப் படிக்கவில்லை என்றும், இதனால் பெற்றோர் போசாததால் மன உளைச்சலில் இருந்த மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டதாக காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது
மேலும் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் காவலர்கள் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

